tamilnadu

img

காட்டூர் சுகாதார நிலையத்தில் மருந்துகள் தட்டுப்பாடு: நோயாளிகள் அவதி

திருச்சிராப்பள்ளி, ஜன.18- திருச்சி மாநகராட்சி காட்டூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படும் நிலை உள்ளது.  மேலும் சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த நோய் உள்ளவர்க ளுக்கும் மாதாந்திரமாக வழங்க வேண்டிய மாத்திரைகள் கடந்த இரண்டு மாதங்களாக இருப்பில் இல்லை என்று காரணம் கூறி நோயாளிகளுக்கான மாத்திரை வழங்காமல் அலைக் கழிக்கப்படுகின்றனர். இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் கேட்டதற்கு அரசு வழங்க வேண்டிய மருந்து கிட்டத்தட்ட இரண்டு மாத  காலமாக கிடைக்காததால் நோயாளிக ளுக்கு வழங்க முடியவில்லை என தெரிவித்தனர். இதனை கண்டித்தும் நோயாளிக ளுக்கு உரிய நேரத்தில் மருந்து மற்றும் சிகிச்சை வழங்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளியன்று காட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வாலிபர் சங்க மாநகர் மாவட்ட செயலாளர்  லெனின் தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்ட துணைத்தலைவர் கிச்சான், காட்டூர் பகுதி செயலாளர் ஆதம்தீன், பகுதி பொருளாளர் விஜயபாரதி, மார்க்சிஸ்ட் கட்சி கமாருதீன், நாதன், நல்லையன், ராமசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தகவல றிந்து அங்கு வந்த மருத்துவமனை மேலதிகாரிகள், மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தனர். இதனையடுத்து போராட் டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

;