tamilnadu

img

சிஐடியு மாநாட்டு நிதியளிப்பு

திருச்சிராப்பள்ளி, ஆக.5- திருச்சி மாநகர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் 3வது ஆண்டு பேரவை கூட்டம் திருவெறும் பூரில் தியாகி கே.அனந்த நம்பியார் நினைவகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு சேது தலைமை வகித்தார். காட்டூர் பகுதி தலைவர் ராமச்சந்திரன் வரவேற்றார். வேலை அறிக்கையை ராஜேந்திரன் வாசித்தார். வரவு செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் சமர்ப்பித்தார். சிஐடியு மாவட்ட செய லாளர் ரெங்கராஜன் துவக்க வுரையாற்றினார். சிஐடியு மாநில துணை தலைவர் சிங்காரவேலு நிறைவுரை ஆற்றினார். கூட்டத்தில் புதிய தலை வராக மு.ராஜேந்திரன், செய லாளராக பி.சந்திரசேகரன், பொருளாளராக எஸ்.கல் யாணி உள்பட 19 பேர் கொண்ட மாவட்ட நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது.  கூட்டத்தில் சிஐடியு மாநில மாநாட்டு நிதியாக ரூ.10,000 வழங்கப்பட்டது.