tamilnadu

img

தொடர்மழையால் பயிரில் முளைத்த மக்காச்சோளம்..... விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்....

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல், மக்காச்சோளம், கம்பு, சோளம், பயறு வகைகள், கொத்தமல்லி, பருத்தி உள்ளிட்ட அனைத்து பயிர்களும் பருவம் மாறி பெய்த தொடர் மழையால சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணத் தொகை வழங்கிட வலியுறுத்தி விருதுநகர், திருச்சுழி, காரியாபட்டி, சாத்தூர், வெம்பக்கோட்டை, திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, இராஜபாளையம் மற்றும் அருப்புக்கோட்டை  என மொத்தம் 9 வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடும், பிற பயிர்களுக்கு உரிய  நிவாரணத் தொகையையும் தமிழக அரசு வழங்க வேண்டுமென கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இதில், மாவட்டத் தலைவர் அ.விஜயமுருகன், மாவட்ட செயலாளர் வி.முருகன், மாவட்ட பொருளாளர் மனோஜ்குமார், நிர்வாகிகள் குமராண்டி, மார்க்கண்டேன், கண்ணன், சி.மணிக்குமார் ஆகியோரும்விருதுநகரில் ஒன்றிய செயலாளர் சேதுராமசாமி, சிபிஎம்   ஒன்றிய செயலாளர்கள் பி.நேரு, ஆர்.முத்துவேலு, பழனிசாமி ஆகியோரும்,    அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் காத்தமுத்து, விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் காமாட்சிநாதன், ஒன்றிய தலைவர் ஜெயராமன் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.

திருவில்லிபுத்தூர் 
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்தையா  தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜய முருகன் ,தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா, மாவட்ட செயலாளர் அம்மையப்பன்  பேசினர் .வத்திராயிருப்பில்  அனைத்து விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் மணிக்குமார் உள்பட அனைத்து விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

;