tamilnadu

img

தேசிய பஞ்சாலைகளில் அலுவலர்களுக்கு முழுச்சம்பளம்... தொழிலாளர்களுக்கு அரைச்சம்பளமா? சிஐடியு கடும் எதிர்ப்பு...

திண்டுக்கல்:
தேசிய பஞ்சாலைகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு முழுச்சம்பளம் வழங்கும் நிலையில் தொழிலாளர்களுக்கு அரைச் சம்பளம் வழங்குவதற்கு பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.    தமிழ் மாநில பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) மாநில தலைவர் சி.பத்மநாபன்  தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாநில நிர்வாகி கே.ஆர்.கணேசன் கூட்டத்தை துவக்கிவைத்தார். சி.பத்மநாபன்  தலைமைஉரையாற்றினார். சிஐடியு மாநிலக் குழு முடிவுகளை விளக்கி மாநில உதவி தலைவர் எம்.சந்திரன் உரையாற்றினார்.

 கடந்த ஒரு ஆண்டுகாலம் கொரோனா நோய் தொற்று காலம் - இக்காலத்தில் ஒன்றிய அரசு எடுத்துவருகின்ற மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்த போராட்டங்கள் மற்றும் நடைபெற்ற வேலைகளை மாநில பொதுச்செயலாளர் எம்.அசோகன் விளக்கிப் பேசினார்.இந்தக் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகள் பின்வருமாறு:

ஒன்றிய அரசு தனது அதிகாரத்தின் கீழ் உள்ள தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான ஆலைகளை முழுமையாக இயக்க வேண்டும். உற்பத்தி தனியார்மயம் என்ற அடிப்படையில்  பொதுத்துறை சொத்துக்களை சூறையாடுதல் கூடாது. தேசிய பஞ்சாலைகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு முழுச் சம்பளம், தொழிலாளர்களுக்கு அரைச் சம்பளம் என்றில்லாமல் தொழிலாளர்களுக்கும் முழுச்சம் பளம் வழங்க வேண்டும். தமிழக கூட்டுறவு பஞ்சாலைகளில் நடைமுறையில் உள்ள ஊதிய ஒப்பந்தம் 2020 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்துள்ளது. 2021 ஜனவரி முதல் ஊதிய ஒப்பந்தம் அமலாக வேண்டும். தமிழக அரசும், துணிநூல் இயக்குனரும் அனைத்து தொழிற்சங்கங்களுடன் பேசி புதிய ஒப்பந்தம் - ஊதிய உயர்வு மூலம் தீர்வு காண வேண்டும்.தமிழகத்தில் உள்ள அனைத்துபஞ்சாலைகளிலும் பயிற்சியாளர்களுக்கு தினசரி கூலி குறைந்த பட்சம் ரூ. 477/- வழங்கவேண்டும். பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ. 477/-க்கு குறைவில்லாத ஊதியம் வழங்க வேண்டும். பயிற்சியாளர்கள் தவிர அனைத்து பஞ்சாலை தொழிலாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு இருபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.

சிஐடியுவுக்கு பிரதிநிதித்துவம் 
பஞ்சாலை தொழிலாளர் களுக்கு குறைந்தபட்ச கூலியை தீர்மானிக்க குறைந்தபட்ச கூலி நிர்ணயக்குழு கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நியமனம் செய்யப்பட்டது. அக்குழுவில் சிஐடியு சங்கத்திற்கு உரியபிரதிநிதித்துவம் அளிக்கப்பட வில்லை. சிஐடியு சங்கத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் அளித்து குழு மறு நியமனம் செய்யப்பட வேண்டும். அந்த குழு பரிந்துரைகளை விரைந்து பெற்று அமலாக்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;