tamilnadu

img

கரூர் பஞ்சாலை தொழிற்சங்க முன்னாள் தலைவர் தோழர் எம். ஆறுமுகம் காலமானார்..... இறக்கும் தருவாயிலும் தீக்கதிர் நாளிதழை கேட்டு வாங்கி வாசித்த 90 வயது தோழர்....

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியம் போடுவார்பட்டியைச் சேர்ந்த தோழர் எம்.ஆறுமுகம்(90) வெள்ளியன்று இரவு  காலமானார். தோழர் எம்.ஆறுமுகம் கருரில் பஞ்சாலை தொழிலாளியாக இருந்து  தொழிற்சங்கத்தை கட்டுவதில் முன்னின்றவர்.

மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களாக இருந்த தோழர்கள் ஆர்.உமாநாத்,  பி.ராமச்சந்திரன்,  ஆகியோருடன் இணைந்து கரூர் பகுதியில் தொழிற்சங்கத்தை கட்டுவதில் முன்னணி தலைவர் களுள் ஒருவராக  செயலாற் றியவர். கட்சியின் கரூர் தாலுகாக்குழு உறுப்பினராக செயலாற்றினார். அவரது சொந்த ஊரான போடுவார் பட்டி வந்த பிறகு அங்குள்ள கட்சி கிளையில் தன்னை இணைத்துக்கொண்டு கட்சிபணியாற்றினார். தள்ளாதவயதில்கூட கட்சி கிளை எடுக்கும் முடிவை உறுதியாகஅமுலாக்கி வந்தார்.  போடுவார் பட்டிஎன்ற சின்னஞ்சிறு கிராமப்பகுதியில் வாசித்தாலும்  தினசரி தீக்கதிர் நாளிதழை வாங்கி படிப்பதைவழக்கமாக கொண்டிருந்தார். தான் இறக்கும் தருவாயில் கூட தீக்கதிர் வந்துவிட்டதா எனகேட்டு படித்தார். தீக்கதிர் அவருக்கு பிடித்தமான ஒன்று என்பதால் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்ட அவரது நினைவிடத்தின் மீது சனிக்கிழமை வெளியான தீக்கதிர் நாளிதழ் வைக்கப்பட்டது. 

அவருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். அவரது மறைவையொட்டி கட்சியின் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்டச் செயற்குழுஉறுப்பினர் வி.இராஜமாணிக்கம், இடைக்கமிட்டி செயலாளர்கள் ராமசாமி (தொப்பம்பட்டி), கந்தசாமி (பழனி நகர்). சுவமணி (ஒட்டன்சத்திரம்), மாவட்டக்குழு உறுப்பினர் எம்.கருணாகரன், மற்றும் சின்னத்துரை, செல்லமுத்து ஆகியோர் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

;