பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்ததையொட்டி டுவிட்டரில் மீண்டும் கோபேக் மோடி ட்ரெண்டாகி உள்ளது.
பாஜகவின் தமிழக விரோதே நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் இணைய வாசிகள் கோபேக் மோடி ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் மோடி இன்று சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மோடிக்கு எதிராக மீண்டும் கோபேக் மோடி என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
இம்முறை வெளிநாட்டில் உள்ள டுவிட்டர் பயனாளிகளும் இதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக லத்தின் அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்கின்றனர் என டுவிட்டர் இணையதளம் பதிவு செய்துள்ளது.