புதுதில்லி, மே 28 -பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு ‘இணையான’ மற்றொரு தலைவரை தேடும் பணியில் பாரதிய ஜனதா இறங்கியுள்ளது. அமித்ஷாவுக்கு மோடியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருவருக்கு ஒரு பதவி என்பதால் கட்சிப் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்படஉள்ளார்.ஆர்எஸ்எஸ் பிரச்சாரராக இருந்த மோடி, பின்னர் குஜராத்தில் கட்சிப் பணிக்கு வந்தபோது, பாஜக பிரச்சாரகராக இருந்த அமித்ஷாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.தற்போது தேசிய தலைவர் பதவிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா மற்றும் பெட்ரோலியதுறை அமைச்சர் தர்மேந்திரன் பிரதான் ஆகியோர் பெயர்கள் அடிப்படுகின்றன. இதனிடையே உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்கிற்குசபாநாயகர் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. உடல்நலப் பிரச்னையால் இந்த முறை அருண்ஜெட்லியும் சுஷ்மா சுவராஜும் அமைச்சர வையில் இடம்பெறுவது சந்தேகம். அதே சமயம்ஸ்மிருதி இரானிக்கு முக்கிய பதவி வழங்கப்பட லாம் என்று தெரிகிறது.