tamilnadu

img

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டு வலியுறுத்துவோம்.... கே.பாலகிருஷ்ணன் தகவல்

தஞ்சாவூரில் திருமண நிகழ்வுக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஏற்கனவேஓய்வு காலத்துக்குரிய, பணப்பலன் கள் கொடுக்காமல் 8 ஆயிரம் கோடிரூபாய் பாக்கி வைத்துள்ள நிலையில்,தற்போது அரசு ஊழியர்களின் நிலைமையையும் அதேபோல ஆக்குவதற்காகத்தான் ஓய்வு பெறும் வயதை 60 என அறிவித்துள்ளது.

இதனால் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு என்பது கடுமையாக பாதிக்கப்படும். இன்றைக்கு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழக அரசுதான் காரணம். திமுக கூட்டணியில் முதலில் காங்கிரசுடன் பேச்சு நடக்கிறது. அடுத்த கட்டமாக பிற கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே இரட்டை இலக்கத்தில் போட்டியிட்டு உள்ளது. வரும் தேர்தலிலும் இரட்டை இலக்கத்தில் போட்டியிட வலியுறுத்துவோம்.
அமமுகவில் டி.டி.வி.தினகரனை முதல்வர் வேட்பாளர் என அறிவித்துள்ளனர். பிரதமர் வேட்பாளராக கூட அறிவிக்கலாம். ஆனால் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் கேள்வி. ஏற்கனவே வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரன் நின்று டெபாசிட் வாங்கட்டும் பிறகு அவர் முதலமைச்சரா என்ன என்பதை பார்க்கலாம்.சசிகலாவின் வருகை தமிழ்நாட்டு அரசியலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதிமுகவில் வேண்டுமானால் கூடுதலாக குழப்பத்தை உண்டு பண்ணலாம். அதிமுக - சசிகலா இடையே ஏகப்பட்ட பிரச்சனைஉள்ளது. அவர்கள் எளிதில் இணைவார்கள் என்பது சாத்தியமல்ல.பிரதமர் மோடி தேர்தல் முடியும் வரை தமிழகத்துக்கு அடிக்கடி வருவார். வடமாநிலங்களில் அவருக்குசெல்வாக்கு குறைந்துவிட்டதால்,தென்மாநில மக்களை ஏமாற்றுவதற்காக வந்து கொண்டிருக்கிறார்.ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முதலில் கூறியது, தற்போது துணை முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தான். அது குறித்து விசாரிக்கும் ஆணையத்தின் முன் இதுவரை ஓ.பன்னீ்ர்செல்வம் ஆஜராகவில்லை. இது தொடர்பாகத் தான் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்குவந்ததும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்தப்படும் என கருத்து கூறியுள்ளார்.

படக்குறிப்பு : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் - காவல் உதவி ஆய்வாளர் மா.சித்ரா இவர்களின் மகன், நீ.சந்தோஷ் கோபாலன்; எல்ஐசி க.சித்தார்த்தன் - சுஜாதா இவர்களின் மகள் சி.கயல்விழி இருவருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்து திருமணத்தை நடத்தி வைத்தார். முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா, சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் என்.சீனிவாசன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் கோ. உதயகுமார், சிபிஐ தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளர் முத்து.உத்திராபதி, ஆயுள் காப்பீட்டு ஊழியர் சங்க துணைத் தலைவர் க.சுவாமிநாதன், திராவிடர் கழகம் சி.அமர்சிங், சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் நாகை மாலி, திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.ஜெயினுலாப்தீன் மற்றும் கட்சி மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு, மாநகரச் செயலாளர் என்.குருசாமி மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள், பல்வேறு அரங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினர். முன்னதாக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு வரவேற்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன் நன்றி கூறினார்.

;