tamilnadu

ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படும் காவல்துறையினர் வாக்குச் சேகரிப்பில் திமுகவினர் தடுத்து நிறுத்தம்

கும்பகோணம், ஏப்.14-மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் திமுகவேட்பாளர் ராமலிங்கம் மற்றும் அதிமுக வேட்பாளர் ஆசைமணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் ஞாயிற்றுக் கிழமை கும்பகோணம் காமராஜர் சாலையிலுள்ள துாயஅலங்காரன்னை தேவலாயத்தில் கிறிஸ்துவ மக்களிடம் வாக்குச் சேகரிப்பதற்காக திமுக சார்பில் நகர செயலாளர் தமிழழகன் தலைமையிலும், அதிமுக வேட்பாளர் ஆசைமணி தலைமையிலும் கிறிஸ்துவ ஆலயம் முன்பு கூடினர். இருதரப்பினரும் மக்களிடம் வாக்குச் சேகரித்தனர். அப்போதுவாக்குச் சேகரிப்பதில் இரு கட்சியினரிடைய வாக்கு வாதம்ஏற்பட்டது. தகவலறிந்து வந்த மேற்கு காவல்துறையினர், திமுகவினரை மட்டும் கலைந்து செல்ல கூறினர். இதனால் அதிருப்திஅடைந்த திமுகவினர், அதிமுகவினரையும் அனுப்பினால்தான் செல்வோம் என்றனர். இதனால் காவல்துறையினருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே அதிமுக வேட்பாளர் ஆசைமணி, மறை மாவட்ட ஆயரை சந்தித்து வாக்குச் சேகரிக்கச் சென்றார். இதையறிந்த திமுகவினர், ஆயரை சந்திக்க செல்வதாக தெரிவித்து ஆலயத்திற்குள் சென்றனர். ஆனால் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அதிமுகவினருக்கு சாதகமாக செயல்பட்டனர். இதைத்தொடர்ந்து ஆயர் அலுவலகத்திலுள்ளவர்கள் சமாதானம் செய்ததின் பேரில் திமுகவினரும், அதிமுகவினரும் தனித் தனியாக சென்று மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமியிடம் வாக்கு சேகரித்துஆதரவு திரட்டினர்.

;