tamilnadu

img

தஞ்சையில்  துளிர் திறனறிதல் தேர்வு

 தஞ்சாவூர், செப்.2- அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் தஞ்சாவூரில் மாவட்ட தலைவர் நாராயணசாமி தலைமை யில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் லெ.முருகன் வர வேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம் மனோகர், தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் பணிகள் குறித்து பேசினார். மாநில நிர்வாகிகள் முனைவர் சுகுமாரன், ஸ்டீ பன்நாதன், பாலகிருஷ்ணன், தியாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  கூட்டத்தில், இத்தேர்வில் மாவட்டத்திலிருந்து 5 ஆயி ரம் மாணவர்களை பங்கேற்க வைப்பது, செப்.8 அன்று கல்லணையில் நடைபெற உள்ள அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தினை இம்மாவட்டம் சார்பில் சிறப்பாக நடத்திக் கொடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுக்குழு உறுப்பினர் முனைவர்.கலைவாணி, செயற்குழு உறுப்பினர்கள் அருணாதேவி, ராஜசேகர், கே.கே.தியாகராஜன், செந்தில் (கும்பகோணம்), சிவகுமரன், கமலா, ஐபிஇஏ பள்ளி தியாக ராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசேகர் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

;