tamilnadu

img

தஞ்சை பழைய பேருந்து நிலைய மதுக்கடையை அகற்றக் கோரி மாதர் சங்கம் போராட்டம்....

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை (எண்:79) பெண்களுக்கும், பொதுமக்களுக்கும், மாணவிகளுக்கும், வணிகர்களுக்கும் மிகுந்த இடையூறாக இருப்பதால், கடையை அப்புறப்படுத்தக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை பழைய பேருந்து நிலையம் அருகில் நூதன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்செல்வி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் இ.வசந்தி,மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி, கிளைச் செயலாளர் அனு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டநிர்வாகிகள், சிபிஎம்  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், தஞ்சை மாநகரச் செயலாளர் என்.குருசாமி, மாநகரக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மதுக்கடை யை அப்புறப்படுத்த வேண்டும் எனவலியுறுத்தி பெண்கள் ஒப்பாரி வைத்துநூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் வட்டாட்சியர், டாஸ்மாக் உதவி மேலாளர் ஆகியோர் திங்கட்கிழமை அமைதி பேச்சுவார்த்தை நடத்தஏற்பாடு செய்வதாகவும், கடையை நிரந்தரமாக மூடுவது குறித்து பேசிமுடிவெடுக்கலாம் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து போராட்ட த்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

;