tamilnadu

மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

கும்பகோணம், ஏப்.20- கும்பகோணம் மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 11 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேலுச்சாமி, இளங்கலை மற்றும் முதுகலை 283 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் கல்லூரி தலைவர் விஜயகுமார், கல்லூரி முதல்வர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

;