tamilnadu

img

தஞ்சை மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்கள் மூடல்....

தஞ்சாவூர்:
இரண்டாவது அலை கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்கள்அனைத்தும் மூடப்பட்டு, சுற்றுலாப்பயணிகள் மற்றும் பார்வையாளர் களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு கொரோனாத் தொற்று தொடங்கியதும், தஞ்சை பெரிய கோயில், அரண்மனை வளாகம்உள்ளிட்டவை மூடப்பட்டு, பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டது. சில மாதங்களுக்கு பிறகு, கொரோனாத் தொற்று குறைந்த நிலையில், 2020 செப்.1 ஆம் தேதி பெரியகோயில், பின்னர் நவ. 10 ஆம் தேதிஅரண்மனை வளாகம் திறக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள், பார்வையா ளர்கள் வருகை அதிகரித்து காணப் பட்டது. தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில், கடந்தஏப்.16 முதல், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள, தஞ்சை பெரிய கோயில்,தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போதுசெவ்வாய்க்கிழமை முதல், தமிழகத்தில்உள்ள சுற்றுலா தலங்கள், கடற்கரை கள், அருங்காட்சியகம், கலைக்கூடம் ஆகியவற்றிற்கும் பொதுமக்கள் செல்ல, தமிழக அரசு தடை விதித்துள்ளது.  இதையடுத்து தஞ்சாவூர் அரண்மனை, அரண்மனை வளாகத்தில் உள்ள அருங்காட்சியகம், கலைக்கூடம், சரஸ்வதி மஹால் நூலகம், ராஜராஜசோழன் மணிமண்டபம், கல்லணை, பேராவூரணி அருகேயுள்ள மனோரா ஆகிய சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. அதேபோல் பல்வேறு வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா தலங்கள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

;