tamilnadu

img

ரூ.3.5 லட்சம் மதிப்பில் அரசு பள்ளிக்கு கழிப்பறை

ஏற்காடு, ஜன.28- ரோட்டரி சங்கங்கத் தினர் ஏற்காடு அரசு பள் ளிக்கு ரூ. 3.5 லட்சம் மதிப் பிலான கழிப்பறை கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஏற் காடு, செங்காட்டில் அரசின்  நடுநிலை பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு ரோட்டரி கிளப் ஆஃப் சேலம் காஸ்மாஸ் மற்றும் சென்னை மித்ரா ரோட்டரி கிளப் இணைந்து ரூ.3.50 லட்சம் மதிப்பிலான கழிப்பறை கட்டப்பட்டுள்ளன. இக்கழிப்பறையை பள்ளிக்கு ஒப்படைக்கும் நிகழ்வு, சேலம்  ரோட்டரி தலைவர் ராஜேஸ் ரத்தோடு தலை மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செயலாளர் சிவஜோதி கண்ணன், வட்டார கல்வி அலுவலர் அலெக்சாண்டர், சீனி வாசன், தினேஷ் மேத்தார், வார்டு உறுப் பினர் சீனிவாசன், தேவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  நிறைவாக பள்ளி தலைமையாசிரியை வனஜகுமாரி நன்றி கூறினார்.

;