tamilnadu

img

சேலம் நாடாளுமன்ற  தொகுதி எஸ்.ஆர்.பார்த்திபன் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுடன் சந்திப்பு

சேலம் நாடாளுமன்ற  தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.ஆர்.பார்த்திபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக்குழு அலுவலகத்திற்கு வருகைபுரிந்து மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்திக்கு பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார். இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, எம். சேதுமாதவன், எம்.குணசேகரன், மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ், வடக்கு மாநகர செயலாளர் எம்.முருகேசன்  மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்..