tamilnadu

தேர்தலை முன்னிட்டு ஹோட்டல், பேக்கரி கடைகளுக்கு விடுமுறை

சேலம், ஏப்.17-சேலம் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் மற்றும் பேக்கரி கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என சேலம் மாவட்ட ஹோட்டல் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் தலைவர் சண்முகம் மற்றும் சங்க செயலாளர் செல்வி மெஸ் பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஹோட்டல் மற்றும் பேக்கரி கடைகள் மற்றும் டிகிரி காபி பார் உரிமையாளர்கள், பணியாளர்களுக்கு கடை விடுமுறை அளித்து தவறாமல் வாக்களிக்கும் படி கேட்டுக் கொண்டனர்.

;