tamilnadu

img

ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியவில்லை சேலத்தில் தனியார் பள்ளி திடீர் மூடல்..... பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி - பெற்றோர்கள் வேதனை.....

சேலம்:
சேலத்தில் உள்ள தனியார் பள்ளி திடீரென நிரந்தரமாக மூடப்பட்டதால் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இதனால், பெற்றோர்கள் வேதனைஅடைந்துள்ளனர்.

கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் செயல்படாமல் உள்ளன. சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகள் தங்களது பள்ளியில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு சம்பளத்தை தர முடியாமல் மிகவும்இக்கட்டான சூழ்நிலையில் பள்ளியை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள விநாயகா வித்யாலயா பள்ளியானது இனி  செயல்படாது என பள்ளி நிர்வாகத்தினர், மாணவர்களின் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பிஇருந்தனர்.மேலும், மாணவர் களுக்கு செலுத்த வேண்டிய மீதித்தொகையை செலுத்தி மாணவர்களின் மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்ட வற்றைப் பெற்று மாற்றுப் பள்ளியில் உங்களது குழந்தைகளை சேர்த்துக்கொள்ளலாம் என்று குறுஞ்செய்தி மூலமாக தகவல்கள் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டனர். மேலும், அங்குஉள்ள காவலாளியிடம் இதுதொடர்பாக கேட்டதற்கு, சரிவர பதில்தெரிவிக்கவில்லை. 

இதைத்தொடர்ந்து பள்ளி முதல்வருக்கு தொலைபேசி மூலமாகஅழைப்பு விடுத்தனர். ஆனால் அழைப்புகளை ஏற்கவில்லை.இதுகுறித்து அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், மேற்கண்ட பள்ளியானது இனிசெயல்படாது என பள்ளி நிர்வாகத்தினர் குறுஞ்செய்தி அனுப்பியது எங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இதனால், தங்கள் குழந்தைகளின் கல்விக் கனவுகள் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, இதுதொடர்பாக அப்பள்ளியின் தலைமை நிர்வாகிகள் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். மாற்றுப் பள்ளியில் திடீரென குழந்தைகளை சேர்த்து படிக்க வைப்பது மிகவும் சிரமம் என்றும், நோய்த்தொற்று  காலத்தில் தங்களின் வாழ்க்கை நடத்துவதே மிகப்பெரியகேள்விக்குறியாக உள்ளது;  இந்நிலையில் எங்கள் குழந்தைகளை எந்தப்பள்ளியில் படிக்க வைப்பது   என புரியவில்லை; எனவே,  உடனடியாகமாவட்ட கல்வி  அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர்.

;