tamilnadu

img

வரலாற்றில் தவறு இழைத்துவிட்டீர்கள் நீதிபதிகளே!

தலைமை செயலராக தனது பணிக்காலத்தில் ப்ளாஸ்டிக் தடை கண்காணிப்பு, மருத்துவக் கழிவு மேலாண்மை போன்ற  பல்வேறு குழுக்களின் தலைவராக பணியாற்றிய அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கிரிஜா வைத்தியநாதன் நியமனம் சரி என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இதுபோன்ற குழுக்களில் நிர்வாக ரீதியிலான எடுத்த முடிவுகளை வைத்து மட்டுமே அவரை நிபுணத்துவம் பெற்றவராக கருத முடியாது என்பது எங்களது வாதமாக இருந்தது. ஆனாலும், கிரிஜா வைத்தியநாதன் பசுமைத் தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக தகுதி பெறுகிறார் என தீர்ப்பளித்துள்ளது.
அவரது நியமனத்திற்கான தடையையும் உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. 

இப்படி தீர்பளித்தன் மூலம் தவறான முன்னுதாரணத்தை காட்டியுள்ளது உயர்நீதி மன்றம். அதாவது, நிர்வாக ரீதியாக பெற்ற அனுபவத்தை நிபுணத்துவமாக கருதுவது, யார் வேண்டுமென்றாலும் நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்வதற்கு வழிவகுக்கும். 

வரலாற்றில் தவறு இழைத்துவிட்டீர்கள் நீதிபதிகளே.

;