tamilnadu

img

தொழிலாளர்கள் - குடும்பங்களை பாதுகாக்க தொழிற்சாலைகள் இயங்க தடைவிதித்திடுக..... தமிழக முதல்வருக்கு சிஐடியு வேண்டுகோள்.....

சென்னை:
கொரோனா நோய்த் தொற்று பரவும் இக்காலத்தில் தொழிலாளர்களையும், தொழிலாளர் குடும்பங்களையும் பாதுகாக்க, அனைத்து தொழிற்சாலைகளும் இயங்க தடைவிதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு  சிஐடியு வேண்டு கோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிதீவிரமடைந்து தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  தமிழகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கவும், மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மே 10 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை என இருவார காலத்திற்குமாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளார். நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சிஐடியு முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.இந்த ஊரடங்கு அறிவிப்பில் கடந்த ஆண்டு பிறக்கப்பட்ட அரசாணையில் பட்டியலிட்டுள்ளபடி தடையின்றி தொடர்ந்து செயல்படவேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள்   மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டும்  இந்த ஊரடங்கிலும்  செயல்பட அனுமதிஅளிக்கப்படுவதாகவும் இத்தகைய தொழிற்சாலைகளில் பணி யாற்றும் ஊழியர்கள் / அலுவலர்கள் இந்நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் பேருந்துகளிலோ அல்லது சொந்த வாகனங்களிலோ இந்நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டையுடன் செல்ல அனுமதிக்கப்படுவதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு மக்களின் நடமாட்டத்தை குறைத்து நோய் பரவலை தடுக்கும் வகையிலேயே மக்களை வீட்டில் இருப்பதை உத்தரவாதப்படுத்தவே இந்த முழு ஊரடங்கு நடவடிக்கையை அமல்படுத்தவுள்ளது. அதே நேரத்தில் சில தொழில் நிறுவனங்கள் அத்தியாவசியம் என்ற பெயரில்  தொடர்ந்து நடத்த அனுமதிக்கக்கூடாது.தளர்வுகளுடன் ஊரடங்கு உள்ள போதே பல தொழில் நிறுவனங்களில் 50 சத தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டுமென்பதும், தொழிலாளர்களை குடியிருப்புகளி லிருந்து அழைத்து வரும், சென்றுசேர்ப்பதுமான ஏற்பாடுகளை நிறுவனங்களே செய்ய வேண்டுமென் பதும் அதன்படி தொழிலாளர்களை அழைத்து வரும்  போது அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென்பதுமான அரசின் வழிகாட்டுதல்கள் முழுமையாக அமலாக்கப்படவில்லை, இதனால்  பணிக்குச் சென்ற தொழிலாளர்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி யுள்ளனர். சில தொழிலாளர்கள் உயிரிழந்தும் உள்ளனர்.  

அரசு அறிவித்துள்ள முதற்கட்ட ஊரடங்கு காலத்தில் மருத்துவம் சார்ந்த அத்தியாவசியப் பணிகள் தவிர்த்து இதர அனைத்து தொழில் நிறுவனங்களும் இயங்க தடை விதித்தும்  இந்த நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தம் மற்றும் நிரந்தரமில்லாத இதர பிரிவு தொழிலாளர்களுக்கு  ஊதியம் வழங்குவதற்கு  முதலமைச்சர் உத்தரவிடவேண்டும்.மேலும்  குடும்ப அட்டைதாரர்களுக்கு இம்மாதமே ரூ.2 ஆயிரம் என்று அரசின் அறிவிப்பைசிஐடியு வரவேற்பதோடு,    பொதுவிநியோகத்திட்டத்தின் மூலம்  உணவு தானியங்கள் வழங்கி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கமுதலமைச்சர் உரிய  நடவடிக்கை களை மேற்கொள்ள  வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

;