tamilnadu

img

மேகதாது விவகாரத்தில் அரசோடு இணைந்து செயல்படுவோம்... கே.பாலகிருஷ்ணன்...

சென்னை:
மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடு அரசுக்கு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது வருமாறு:-

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக மேகதாதுவில் அணைக் கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கு ஒரு கருத்தொற்றுமையை உருவாக்கும் வகையிலும், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் ஏகோபித்த குரலை எழுப்புகின்ற வகையிலும் சட்டமன்ற அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தை முதலமைச்சர் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, “தமிழக அரசு மேற்கொண்டிருக்கும் முயற்சியை வரவேற்று பாராட்டு தெரிவித்திருக்கிறது.”
பெங்களூரு நகரத்திற்கு குடிநீர் வழங்குவதற்கு மேகதாதுவில் அணை கட்டுகிறோம் என்று கர்நாடக அரசு சொல்லுகிறது. ஆனால், ஏற்கெனவே காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் வழங்கியிருக்கும் இறுதி தீர்ப்பில் பெங்களூரு நகரத்தின் தண்ணீர் தேவையையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் கர்நாடகத்திற்கு பகிர்ந்து அளித்துள்ளது.காவிரி நடுவர் மன்றம் தமிழ்நாட்டிற்கு 192 டிஎம்சி தண்ணீரை வழங்கியதை உச்ச நீதிமன்றம் 177.5 அடியாக குறைத்தது. மீதமுள்ள14.5 டிஎம்சி தண்ணீரை பெங்களூர் நகரப் பகுதிகளுக்கும் சுற்றுப்புறத்திற்கும் வழங்கியதால்தான் தமிழகத்திற்கு வழங்கிய தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது.

உண்மைக்கு மாறானது
தற்போது, பெங்களூரு நகரின் குடிநீர்பிரச்சனையை காரணம் காட்டி மேகதாதுவில் அணைக் ட்டுவதற்கு முயற்சிப்பது உண் மைக்கு மாறானது. குடிநீர் பிரச்சனையை காரணம் காட்டி தமிழ்நாட்டை லைவனமாக மாற்றும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபடுகிறது. இதை சட்டரீதியாக எதிர்த்து உச்ச திமன்றம் செல்வது, காவிரி மேம்பாட்டு ஆணையத்தில், பசுமை தீர்ப்பாயத்தில் சட்டப்போராட் டங்களை நடத்த வேண்டும். ஒன்றிய அரசை வற்புறுத்தி கர்நாடக மாநிலஅரசின் அனைத்து முயற்சிகளையும் டுத்துநிறுத்துவதற்கு தமிழ்நாட்டில் நடந்த அனைத்துகட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.கர்நாடக அரசின் முயற்சிக்கு எந்தவகையிலும் இடம் கொடுத்துவிடக்கூடாது என்றும் அனைத்துகட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றியிருக்கிறோம்.மேகதாதுவில் அணைக் கட்டக்கூடாது என்பதற்கு தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து கட்சிகளும் பிரதமர் மற்றும் ஒன்றிய அரசின் நீர்பாசனத்துறை அமைச்சரையும் நேரில்சந்தித்து வலியுறுத்த நேரம் ஒதுக்கி கொடுக்குமாறு கேட்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.தமிழ்நாடு அரசும் முதலமைச்சரும் மேற் கொண்டிருக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் இணைந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்திருக்கிறாம்.இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

;