tamilnadu

மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை...

சென்னை:
தமிழகத்தில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம், மெல்லமெல்ல குறைந்து வருகிறது. நேற்று தமிழகம் முழுவதும் 2,405 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில்1,633 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். வியாழனன்று (ஜூலை 15)49 பேர் கொரோனா  தொற்றுக்கு உயிரி ழந்தனர். 3,006 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதனிடையே, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, கடந்த 12-ம் தேதி முதல் தமிழகத்தில் அமலில் இருந்து வருகிறது. இதன்படி, கடைகளைத் திறந்து வைப்பதற்கான நேரம் இரவு 9 மணி வரை நீட்டிக் கப்பட்டது. வெளிமாநிலங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், புதுச் சேரிக்கு மட்டும் பேருந்துகள் இயக்கப் பட்டன. உணவகங்கள், தேநீர்க் கடைகள் இரவு 9 மணி வரை 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக் கப்பட்டது. சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை நீடிக்கிறது. பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் திறக்கப்படவில்லை.

தமிழகத்தில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 19-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ளி ன்று (ஜூலை 16) தலைமைச் செயலககத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோ சனை நடைபெற்றது. இதில், தலைமைச்  செயலாளர் வெ.இறையன்பு கலந்துகொண்டார்.இதில், பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகளைத் திறக்க சாத்தியக்கூறுகள் உள்ளனவா என ஆலோசிக்கப்பட்டது. கடைகள், உணவகங்கள், தேநீர்க் கடைகளைத் திறந்துவைக்கும் நேரம் நீட்டிக்கப்படலாம் எனவும், வெளிமாநிலங்களுக்கு இடையே பேருந்து சேவை வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க் கப்படுகிறது.

;