‘சவுக்கு’ சங்கரின் நேர்காணலை வெளியிட்டதற்காக பெலிக்ஸ் ஜெரால்டின் ‘ரெட் பிக்ஸ்’ (redpix) மன்னிப்பு கேட்டுள்ளது. இதுபற்றி கருத்துப் பதிவிட்டுள்ள வழக்கறிஞர் நிலவுமொழி, “அந்த சர்ச்சைக்குரிய காவல்துறையில் பணிபுரியும் பெண்கள் குறித்தான பேட்டியில், பெலிக்ஸ், கேள்வி கேட்பதை விடுத்து, சங்கரின் கருத்தை ஆமோதித்தார். அதற்கும் சேர்த்தல்லவா மன்னிப்பு கோர வேண்டும்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.