tamilnadu

img

அரசு, தனியார் மருத்துவமனை படுக்கை விபரங்களுக்கு வலைதளம்....

சென்னை:
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிக்காக மக்கள் அல்லல் படுகிறார்கள்.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புரட்சிக்கான காலிப் படுக்கைகள் குறித்த விபரங்களை அறிந்துகொள்ள தமிழக அரசு புதிதாக வலைதளத்தில் ஏற்படுத்தி இருக்கிறது.அதன்படி, https:tncovidbeds.tnegs.org என்கிற வலைதளத்தில் ஆக்சிஜன் வசதி இல்லாத சாதாரண படுக்கை வசதிகள், ஆக்சிசன் வசதியுடன் தீவிர சிகிச்சைக்கான சாதாரண படுக்கை வசதிகள், தீவிர சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் குறித்த விபரங்களை அறிந்து கொள்ள முடியும் என அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க. ஸ்டாலின்,சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப் பட்டுள்ள கொரோனா சிறப்பு மையத்தில் ஆய்வு செய்தார். அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், கே.என். நேரு, துறை அதிகாரிகள் உடன் சென்றனர்.அப்போது, இந்த மையத்தில் அமைக் கப்பட்டிருக்கும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 360 படுக்கைகள் 10ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரி
வித்தனர்.மேலும் 500 ஆக்சிஜன் படுக்கைகள் 15 ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் முதலமைச்சரிடம் கூறினர்.

;