tamilnadu

img

அதிமுக - பாஜக கூட்டணியை முறியடிப்போம்.... தமிழகத்தில் சீத்தாராம் யெச்சூரி மார்ச் 4 முதல் தேர்தல் பிரச்சாரம்....

சென்னை:
அதிமுக - பாஜக கூட்டணியை முறியடிப்போம் என்ற முழக்கத்துடன் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றத் தேர்தல் பரப்புரை கூட்டங்களை நடத்தி வருகிறது. மார்ச் 4 ஆம் தேதி முதல் கட்சியின் அகிலஇந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள் கிறார். 

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியில் அமைந்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவுடன் அதிமுகவும், மேலும் சில கட்சிகளும் கூட்டணிஅமைத்து போட்டியிடுகின்றன. இந்த  “அதிமுக - பாஜக கூட்டணியை முறியடிப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் தீவிரதேர்தல் பிரச்சாரத்தை முழுவீச்சில் நடத்தி வருகிறது. இப்பணியில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத் மற்றும் பிருந்தா காரத் ஆகியோரும் தமிழகத்தில் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஏற்கனவே கட்சியின் அகில இந்தியபொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்குதிட்டமிடப்பட்டிருந்த தேர்தல் பரப்புரைக்கூட்டங்களின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள் ளது. சீத்தாராம் யெச்சூரி - கோவை, திருப்பூர்,சேலம், தர்மபுரி, சென்னை ஆகிய இடங்களில்பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

மார்ச் 4 ஆம் தேதி -  கோயம்புத்தூர், திருப்பூர்

மார்ச் 5 ஆம் தேதி - சேலம், தர்மபுரி

மார்ச் 6 ஆம் தேதி - சென்னை

ஆகிய இடங்களில் நடைபெறும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.கட்சியின் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கும் இந்த தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்புடன் சக்தியாக வெற்றி பெறச் செய்ய கட்சி அணிகள் அதற்கான ஆயத்தப்பணிகளை முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

பிரகாஷ் காரத், பிருந்தா காரத்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத் பிப்ரவரி 26, 27 தேதிகளிலும், பிருந்தா காரத் 27, 28 தேதிகளிலும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

;