tamilnadu

img

கூட்டாட்சி தத்துவம் அடிப்படையிலேயே ஒன்றிய அரசு என்ற சொல்லை பயன்படுத்துகிறோம் - மு.க.ஸ்டாலின்

ஒன்றியம் என்ற சொல்லில் கூட்டாட்சி தத்துவம் இருப்பதால் அதை பயன்படுத்துகிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 

ஒன்றிய அரசு என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்று சட்டப்பேரவையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
சட்டசபையில் இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் ஒன்றிய அரசு என்ற சொல்லை பயன்படுத்துகிறோம் அரசமைப்புச் சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதன்படியே இந்த சொல் பயன்படுத்தப்படுத்துகிறோம். மேலும், மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதை குற்றமாகப் பார்க்க வேண்டாம். ஒன்றிய அரசு என்பது தவறான சொல் அல்ல. ஒன்றிய அரசு என்ற சொல்லையே தமிழக அரசு தொடர்ந்து பயன்படுத்தும் எனவும் தெரிவித்தார்.
இதற்கு முன்பு அறிஞர் அண்ணா, கருணாநிதி போன்றோர் ஒன்றிய அரசு என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. இதற்கும் பதிலளித்த ஸ்டாலின், அண்ணா ஆட்சி காலத்தில் வெளியிடப்பட்ட திமுக அறிக்கையில் ஒன்றிய அரசு என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

;