சென்னை, ஏப். 21- வேல்ஸ் கால்பந்து கிளப்பின் சர்வதேச தூதராக ஸ்பெயின் கால் பந்து வீர்ர் கெய்ஸ்கா டோகுரோவை வேல்ஸ் கால்பந்து கிளப் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் நியமித்துள்ளார்.
தமிழ்நாட்டின் ஒரே ஐ-லீக் அணியான வேல்ஸ் கால்பந்து கிளப், 2024-25ம் ஆண்டு சீசனுக்காக முன்னேறி வருகிறது. டோகுரோ, நியமனத்தின் மூலம் வேல்ஸ் கால்பந்து கிளப்பானது சர்வதேச கால்பந்து அகாடமியை போல உருமாற்றம் பெற்றுள் ளது. வேல்ஸ் எப்சி இன்டர்நேஷனல் புட்பால் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் என்று பெயரி டப்பட்டுள்ள இங்கு இந்தியா முழுவதும் உள்ள வீரர்களுக்கு ஸ்பெயின் பயிற்சியா ளர்களின் கீழ் பயிற்சியும், பல்வேறு யூத் லீக் மற்றும் ஐ-லீக்போட்டிகளில் பங்கேற்கவும் வாய்ப்பு வழங்கப்படும். இதனை தெரிவித்துள்ள ஐசரி கணேஷ், கெய்ஸ்கா டோகுரோவின் சிறப்பான ஈடுபாடு எங்கள் முயற்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. அவரது அறிவு மற்றும் திறமை கால்பந்து வீரர்களின் வளர்ச்சி மற்றும் நமது செயல்திறனை மேம்படுத்தும் என்றார்.
மேலும் முன்னணி விளையாட்டு ஆடை பிராண்டான பூமா எங்களுடன் இணைந்து இருப்பது பெருமிதமளிக்கிறது என்றும் அவர் கூறினார்.