tamilnadu

img

கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு: அமைச்சர்....

சென்னை:
கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படைகூலியில் 10 விழுக்காடும் அகவிலைப்படியில் 10 விழுக்காடும் உயர்வு வழங்கப்படும் என்றுசட்டப்பேரவையில் அமைச்சர் ஆர் காந்தி தெரிவித்தார்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் கைத்தறி கைத்திறன் துணிநூல் மற்றும் கதர் துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆர் காந்தி,”கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு அரசால் வழங்கப்பட்ட வேண்டிய நிலுவைத் தொகை தள்ளுபடி மானியம் கூடுதலாக 160 கோடி வழங்கப்படும்” என்றார்.

தொடர்ந்து புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர், “தமிழ்நாட்டில் தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு அடிப்படை கூலி உயர்வு வழங்கப்படாததை கருத்தில்கொண்டும், நெசவாளர்களின் வருவாயை அதிகரித்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அடிப்படை கூலியில் 10 சதவீத உயர்வு அகவிலைப்படியை 10 சதவீதம் வழங்கப்படும் இதன் மூலம் சுமார் ஒருலட்சம் கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறுவார்கள்” என்றார்.

கைத்தறி நெசவாளர்களுக்கு வீடுகள் கட்ட மானியமாக வழங்கப்பட்டு வரும்தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். அதேபோல் ஆண்டு ஒன்றுக்கு கிராமப்புறத்தில் 500 வீடுகளும் நகரத்தில் 500 வீடுகள் கட்டுவதற்கு கூடுதலாக 200 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.கைத்தறி நெசவில் ஆண்டாண்டு காலமாக உள்ள பாரம்பரியம் மற்றும் கலை நயத்தை பாதுகாக்கவும் வருங்கால புதிய தலைமுறையினர் நெசவுத் தொழிலில் மேன்மை கைத்தறி நெசவாளரின் தமிழ்நாட்டிலுள்ள கலைநயமிக்க கைத்தறி ரகங்களின்சிறப்பை அறிந்து கொள்ளும் வகையில் ரூபாய் 5 கோடி செலவில் கைத்தறி அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி மற்றும் பெடல் தறி சேலை ரகங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் நெசவுக்கு முந்தைய பணிகளுக்கான கூலிஒரு உருப்படிக்கு ரூபாய்  26.67 ஆக உயர்த்தி வழங்கப்படும். சில ரகங்களுக்கு ஒரு உருப்படி 10.30 ரூபாயிலிருந்து 12.36 ஆக உயர்த்தி கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.தமிழ்நாட்டில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் நிறைந்தபணியாளர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது உயர்ந்து வரும் விலைவாசியை கருத்தில் கொண்டு நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பணிபுரியும் 1,033 நிறைந்த பணியாளர்களின் ஊதிய விகிதத்தை சீரமைக்க ஊதிய நிர்ணயக் குழு அமைத்து சம்பள உயர்வு வழங்கப்படும். நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் 406 தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனவும் அமைச்சர் காந்தி கூறினார்.
மாநில அளவிலான சிறந்த கைத்தறி நெசவாளர் விருது வழங்கும் திட்டத்தின் கீழ் பட்டுமற்றும் பருத்தி ரகங்களில் புதுமையான வடிவமைப்புகளை உருவாக்கும் சிறந்த நெசவாளர்களுக்கு முதல் பரிசாக 5 லட்சமும் இரண்டாவது பரிசாக 3 லட்சமும் மூன்றாவது பரிசாக 5 லட்ச ரூபாயும் பரிசுத் தொகை உயர்த்தி வழங்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்தார்.

ஜரிகை உத்தரவாத அட்டை!
கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தால் காஞ்சிபுரம் சரகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படும் சுத்தப்படுத்தப்பட்ட ஜரிகை பட்டுச் சேலைகளில் பயன்படுத்தப்படுகிறது. அந்த ஜரிகையிலுள்ள தங்கம் வெள்ளியின் அளவு சதவீதம் அரசு நிர்ணயித்துள்ள தர அளவீடுகளின் படி உள்ளது என்பதை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும். இதன் மூலம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தால் வாங்கும் பட்டுச் சேலையின் மீது ஆண்டாண்டு காலமாக வாடிக்கையாளர்களுக்கு உள்ள நம்பகத்தன்மை மேலும் அதிகரிக்கும்.அந்த வகையில் தமிழ்நாடு ஜரிகை லிமிடெட் நிறுவனத்தில் பரிசோதனை செய்து தரத்தை உறுதிப்படுத்தி கொண்டு பச்சை இலைகளில் மட்டும் சரிகை உத்தரவாத அட்டை இணைக்கப்படும் இது முதன் முதலாக அறிமுகப்படுத்தப்படுகிறது.இல்லம்தோறும் கோ-ஆப்டெக்ஸ் என்ற இலக்கினை அடைய ரூபாய் 50 லட்சம் செலவில் புதிய வடிவமைப்புகளில் ரகங்களை அறிமுகப்படுத்தி விளம்பரம் செய்யப்படும்.

;