tamilnadu

img

கால்நடை உதவி மருத்துவர் பணியிட நேர்முகத் தேர்வு தேதி மாற்றம்!

சென்னை, 07-

கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கான நேர்முகத் தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர் காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ஜனவரி 4ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழக அரசால், ஜனவரி 28 பொது விடுமுறை நாளாக அறிவக்கப்பட்டுள்ளதால் ஜனவரி 29 மற்றும் 30 ஆகிய நாள்களுக்கு நேர்முகத் தேர்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 28ஆம் தேதி நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் மட்டும் தேதி மாற்றப்பட்ட அழைப்பாணையினை தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்து www.tnpsc,gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தவறும் விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

;