tamilnadu

img

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 3 மாதங்களில் கொரோனா தடுப்பூசி: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மூன்றாம் பாலினத்தவர் அனைவருக்கும் மூன்று மாதங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யும்படி தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும். கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும். ரேஷன்
அட்டைகளோ அல்லது அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வழங்கத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ்பானு என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, மூன்றாம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண நிதியில் முதல் தவணை 2000 ரூபாயை வழங்கி விட்டதாகவும், இரண்டாம் தவணையும் விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதனை ஏற்ற நீதிபதிகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மூன்று மாதங்களுக்குள் தடுப்பூசி செலுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

;