tamilnadu

img

அண்ணாத்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ்  - படக்குழுவினர் அறிவிப்பு 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாத்த’. இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இப்படம் வருகிற நவம்பர் மாதம் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளது. இதனால் படத்தின் அப்டேட்டுகள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. ஆயுத பூஜையை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில்  படத்தின் சென்சார் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அண்ணாத்த திரைப்படத்திற்கு  சென்சாரில் யு /ஏ  சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு  அறிவித்துள்ளது. 

 

;