tamilnadu

img

தமிழகத்தில் இன்று 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும்...

சென்னை:
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து   166 மையங்களில் சனிக் கிழமை (ஜன.16)  போடப்பட உள்ளதாக  சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

முதல் கட்டமாக பெயர்களை முன்பதிவு செய்த சுகாதார பணியாளர் கள் அவரவர் விருப்பத்தின் பேரில் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்வார் கள். கர்ப்பிணிகள், சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப் படாது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் தடுப்பூசி போடப்படும். இலவசமாகவே தடுப்பூசிகள் போடப்படுகிறது.தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சுமார் 30 நிமிடம் பக்கத்து அறையில் அமர வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். அவர்களுக்கு பக்க விளைவு ஏதும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த பிறகே அனுப்பி வைக்கப்படுவார்கள். தமிழகத்தில் தற்போது வரை 4 லட்சத்து 39 ஆயிரத்து 500 பேர் தடுப்பூசி போட முன்பதிவு செய்துள்ளனர்.

அடுத்த கட்டமாக சமூகத்தில் முதல் நிலை பணியில் உள்ளவர்களுக்கும், காவல் துறையில் விருப்பம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி என்பது நோய் வராமல் தடுக்க மட்டுமே. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கட் டாயம் கடைபிடிக்க வேண்டும்.தடுப்பூசிகள் 2 முறை 28 நாட்கள் இடைவெளியில் இலவசமாக போடப் படும். ஒரே நிறுவனத்தின் தடுப்பூசி தான் இரண்டு முறையும் போடப்படும். வேறு நிறுவனத்தின் தடுப்பூசி போடப்படாது.தடுப்பூசி போட்ட பிறகு குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் மது அருந்தினால் பாதிப்பு ஏற்படுமா? என அறிவியல் ரீதியான விளக்கம் எதுவும் இல்லை. மது அருந்துவது எந்த காலத்திலும் உடலுக்கு கேடு விளைவிக்கும். கொரோனா தடுப்பூசி போடும் பணியை வாரத்தில் 4 நாட்கள் நடத்த வேண்டும் என மத்திய அரசு கூறியதன் காரணம் மற்ற பணிகள் பாதிக்கப்பட கூடாது என்ப தற்காகத்தான்.இவ்வாறு அவர் கூறினார்.
 

;