tamilnadu

img

மு.க.ஸ்டாலினுக்கு அரசு ஊழியர் சங்கம் வாழ்த்து.....

சென்னை:
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, மாநில பொதுச் செயலாளர் ஆ.செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த வெற்றியை திமுக என்ற அரசியல் கட்சியின் வெற்றியாக நாங்கள் கருதவில்லை. மாறாக, தமிழகத்தின் வெற்றியாகவே தமிழக மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் தமிழக மக்கள் பல சோதனைகளை கடந்து வந்துள்ளனர். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் திமுக அணியின் வெற்றியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களாகிய நாங்களும் ஒரு பங்களிப்பையேனும் செலுத்தியிருக்கிறோம் என்ற பெருமிதம் கொள்கிறோம். தாங்கள் பதவியேற்று தமிழகத்தை சிறப்பான பாதையில், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக கொண்டு செல்வீர்கள் என்ற முழு நம்பிக்கை உள்ளது. அதற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களாகிய நாங்கள் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு முழு ஒத்துழைப்பை நல்குவோம்” என்று கூறியுள்ளனர்.

;