tamilnadu

img

தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்...

சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான  ஞானதேசிகன் (71). இவர் கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஞானதேசிகன் வெள்ளிக்கிழமை(ஜன.15) காலமானார்.ஞானதேசிகன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.2011 முதல் 2014 ஆம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பு வகித்த ஞானதேசிகன், மாநிலங்களவையின் உறுப்பினராக இருமுறை பதவி வகித்துள்ளார்.
 

;