tamilnadu

img

தமிழகத்திலிருந்து ஆயிரம் விவசாயிகள்.... தில்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க புறப்பட்டனர்....

சென்னை:
விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் 3 சட்டங்களை திரும்பப் பெறவலியுறுத்தியும் விடுதலை இந்தியா காணாத வகையில் தேசத்தை, விவசாயத்தை பாதுகாக்கவும் தலைநகர் தில்லியில் கடந்த 8 மாதகாலமாக உரிமைப் போராட்டம் நடத்தி வரும்விவசாயிகளின் ஒன்றுப்பட்ட போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவித்து உடன் பங்கேற்றிட தமிழ்நாடுவிவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் ஆயிரம் பேர் செவ்வாயன்று (ஆக. 3) சென்னையிலிருந்து தில்லி புறப்பட்டனர்.

அவர்களை ரயில் நிலையத்தி லிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். நிகழ்வில் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, சிபிஎம் மத்திய சென்னைமாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, வடசென்னை மாவட்டச் செயாலாளர் எல்.சுந்தர்ராஜ், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தென் மண்டல துணைத் தலைவர் கே,சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டெல்டா மாவட்டங்களில் இருந்து...
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமையில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் தில்லி புறப்பட்ட னர்.தஞ்சை மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பி.செந்தில்குமார் தலைமையில், மாவட்ட பொருளாளர் எம்.பழனிஅய்யா, விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் சி.பாஸ்கர், எம்.ராம், பிரதீப் ராஜ்குமார், பூதலூர் கண்ணன், கே.ராமசாமி, சசிகுமார், கே.சண்முகம், எஸ்.குமாரவேல், கே.வெங்கடேசன், கலைவாணன், ராஜேந்திரன், எம்.அய்ய நாதன், ஆர்.காசிநாதன் உள்ளிட்ட 15 பேர் தஞ்சையில் இருந்து ரயிலில் செவ்வாய்க்கிழமை காலை சென்னை புறப்பட்டு சென்றனர். 
இவர்களை சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜ், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், எம்.மாலதி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.சிவகுரு, சரவணன், அரவிந்த்சாமி, சிபிஎம்மாநகரச் செயலாளர் என்.குருசாமி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். 

திருவாரூர்
புரட்சிகர முழக்கங்களோடு வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வி.சுப்ரமணியன், மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி, மாணவர் சங்கமாவட்டச் செயலாளர் இரா.ஹரி சுரிஜித் உட்பட 25 பேர் பயணக் குழுவில் இடம் பெற்று தில்லி செல்கின்றனர். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள் தலைமையில் விவசாயிகளை வழியனுப்பு வைக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. மயிலாடுதுறை சந்திப்பில் இருந்து செவ்வாயன்று தில்லி புறப்பட்டவர்களை விவசாயிகள் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கட்சியினர் உற்சாகத்துடன் வழியனுப்பி வைத்த னர்.

;