tamilnadu

img

இம்மாதத்தில் 13வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு!

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிப்பொருள்களின் விலை கடந்த சில நாள்களாக உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 23 காசுகள் அதிகரிக்கப்பட்டு ஒரு லிட்டர் ரூ.98.88 ஆகவும், டீசல் லிட்டருக்கு 6 காசுகள் அதிகரிக்கப்பட்டு ஒரு லிட்டர் ரூ.92.89 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.

மேலும், இம்மாதத்தில் மட்டும் 13வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது

;