இஸ்ரேல் நிபந்தனை இன்றி தாக்குதலை நிறுத்த வேண்டும் இன அழிப்பிலிருந்து அப்பாவி பாலஸ்தீன மக்கள் பாது காக்கப்பட வேண்டும், கிழக்கு ஜெரு சலத்தை தலைநகராகக் கொண்டு 1967-க்கு முன்பிருந்த எல்லையுடன் பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீ கரிக்கப்பட வேண்டும், உலக நாடுகள் ராஜதந்திர வழியில் அரசியல் மற்றும் பொருளாதாரத் தடைகளை இஸ்ரேல் மீது விதித்திட வேண்டும். இஸ்ரேல் சிறைகளில் வாடும் பாலஸ்தீன அரசி யல் தலைவர்கள் உள்ளிட்ட பத்தாயிரம் கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்,
அகதிகளாக பல்வேறு நாடுகளில் துன்புறும் பாலஸ்தீனர்கள் சொந்த மண்ணிற்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்தியத் தொழி லாளர்களை இஸ்ரேல் தொழில்துறை நடவடிக்கைகளுக்கு அனுப்புவதை இந்தியா நிறுத்திட வேண்டும். இஸ்ரேலிடமிருந்து ராணுவத் தள வாடங்கள் இறக்குமதி செய்யப்படு வது நிறுத்தப்பட வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து கலைகளின் வழி பாலஸ்தீன ஆதரவு இயக்கத்தை வியாழனன்று (ஆக.8) சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தியது.
தமுஎகச சென்னை மண்டலம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் கா.பிரகதீஸ்வரன் தலைமை தாங்கி னார். தென்சென்னை மாவட்டச் செய லாளர் வா.அசோக்சிங் வரவேற்றார். நுண்கலைகள் அமர்விற்கு ஓவியர் அ.விஸ்வம் தலைமை தாங்கினார். ஊர்கூடி ஓவியம் வரைதலை திரைக் கலைஞர், ஓவியர் பொன்வண்ணன், கலை இயக்குநர் எம்.டி.பிரபாகரன் ஆகியோர் தூரிகையால் துவக்கி வைத்து, கருத்துரை வழங்கினர்.
. காம்ரேட் கேங்ஸ்டா-வின் ராப் இசைக்குழு பாடல்களை தொடர்ந்து, பாலஸ்தீன கவிஞர்களால் எழுதப்பட்ட கவிதைகளை கவிஞர்கள் ரத்திகா, உமா சக்தி, தீபா ஜெயபாலன், சைதை ஜெ, நா.வே.அருள், ஐ.சரத்குமார், இ. சங்கரதாஸ், ம.ராஜசேகரன் ஆகியோர் பாலஸ்தீன கவிஞர்களாகவே மாறி உயிரோட்டமாக வாசித்தனர்.
. கரம் கோர்க்க அமர்வில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலப் பொருளாளர் ஒய்.இஸ்மாயில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் கே.மணிகண்டன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ம.சித்ரகலா, சிஐடியு ஆட்டோ சங்க தென்சென்னை மாவட்டப் பொருளாளர் அ.பக்கிரி ஆகியோர் முன்னிலையில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழக பொதுச் செயலாளர் ஐ.ஆறுமுகநயினார் கருத்துரை வழங்கினார்.
. நிகழ்வின் முத்தாய்ப்பாக இ.பா.சிந்தன் எழுதி, தமுஎகச சென்னை மண்டலத்தின் வெளியீட்டில் ‘பாலஸ்தீனம்: என்ன செய்ய முடியும் நம்மால்’ நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. திரைக்கலைஞர் ரோகிணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் நூலை வெளியிட எழுத்தாளர்கள் மணிநாத், அ.பகத்சிங், பாரதி புத்தகாலயம் சிராஜூதீன், பதிப்பாளர் சிவ.செந்தில்நாதன், கு.ஆறுமுகம், கி.பாரி, பேரா.அருண்கண்ணன் உள்ளிட்ட படைப்பாளிகள் பெற்றுக் கொண்டனர். சைதாப்பேட்டை கிளைச் செயலாளர் மு.சா. நன்றி கூறினார்.
ஓவியம், புத்தகக்காட்சி...
ஓவியக் காட்சி, புத்தக் காட்சி, கவிதைக் காட்சிகளை மாநில துணைத் தலைவர், எழுத்தாளர் மயிலை பாலு திறந்து வைத்தார். நிர்மாணக் கலையை முனைவர் ச.இளங்கோ, பேரா. பிரபாகரன் காசிராஜன் ஆகியோர் நிகழ்த்தினர்.
‘சடலமாய் பிரகாசிக்கிறோம்’ நாடக காட்சி
நிகழ்த்துக் கலைகள் அமர்விற்கு நாடகவியலாளர் பிரளயன் தலைமை தாங்கினார். பாசிச இனவெறி இஸ்ரே லுக்கு எதிராகவும், சமத்துவத்தையும் அமைதியையும் விரும்பும் பாலஸ் தீனதிற்கு ஆதரவாகவும் ஓங்கி ஒலித்தது மாற்று ஊடக மையம் கலைஞர்கள் பறை யிசை. அதனை தொடர்ந்து இயக்குநர் ராகவ் ஆனந்தாவுடன் இணைந்து வழக்குரைஞர் ஹேமா, மற்றும் ஃபாமிதா, நிறைமதி ஆகியோர் இயக்கிய செம்படைக் கலைக்குழு-வின் ‘சடலமாய் பிரகாசிக்கிறோம்’ நாடகம் அவையில் உள்ளவர்களை கவர்ந்தது.
பாலஸ்தீன குழந்தைகள், பெண்கள் என மக்களை இஸ்ரேல் எப்படி இனப்படு கொலை செய்கிறது, யார் தூண்டுதன் பேரில் செய்கி்றது, மக்கள் எவ்வாறெல் லாம் துன்பப்படுகின்றனர் என்பதை அவர் களின் வலிகளையும், வேதனைகளையும் மிக மிக எதார்த்தமாக நாடக கலைஞர்கள் வாழ்ந்து காட்டினர்.
தொகுப்பு: செ.கவாஸ்கர்