tamilnadu

img

தொடங்கியது காத்திருப்பு ப் போராட்டம்.... ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தல்....

சென்னை:
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த் தையை ஆக்கப்பூர்வமான முறையில் நடத்தக்கோரி வியாழனன்று (ஜன.7) தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழக அலுவலகங்கள் முன்பு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட் டத்தை தொடங்கினர்.போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை ஜன.5 அன்று நடைபெற்றது. அதில், துறை அமைச்சர், நிதித்துறை சார்ந்தவர்கள் கலந்து கொள்ளவில்லை. தொழிற்சங்கங்கள் எழுப்பிய கோரிக்கைகள், கொள்கை ரீதியான  முடிவுகளுக்கு அதிகாரிகள் விளக் கம் அளிக்கவில்லை.

அண்ணா தொழிற்சங்கமும் ஆளும் அதிமுகவின் கைப்பாவை சங்கங்களும் தொழிலாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கும் அரசு எந்த பதிலையும் அளிக்கவில்லை. அடுத்த பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடப்படாமல் கூட்டம் முடிவுக்கு வந்தது.தொழிலாளர்களை குழப்பமான சூழலுக்கு கொண்டு சென்று துரோக ஒப்பந்தம் ஒன்றை திணிப்பதை அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. எனவே, உருப்படியான பேச்சுவார்த்தை நடத்தக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் சென்னை பல்லவன் இல்லம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் இடையே தொமுச பொதுச் செயலாளர் கி.நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மண்டல, கழக அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. போக்குவரத்துக் கழகங் களை பாதுகாக்க வேண்டும், கழகங்களின் வரவுக்கும் செலவுக்கும் இடையேயான வித்தியாச தொகையை அரசு வழங்க வேண்டும், முழுமையாக  பேருந்துகளை இயக்க வேண்டும்,

தொழிலாளர்களின் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை அமைச் சர் கலந்து கொண்டு உருப்படியாக நடத்த வேண்டும். அகவிலைப்படி பறிப்பை திருப்பி தருவதோடு, நிலுவையையும் வழங்க வேண்டும். அரசாணை வெளியிட்டபடி ஓய்வூதியர்களுக்கு பணப்பயன்களை வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர் களுக்கு 119 சதவீத அகவிலைப் படியை இன்றைய நிலைக்கு உயர்த்தி வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப்போராட்டம் நடைபெறுகிறது.ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை என்கிற போர்வையில் அரசு நாடகம் நடத்துகிறது. அமைச்சரும், நிதித் துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளாத பேச்சுவார்த்தையை ஏற்கமுடியாது. உருப்படியான பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும் என்று அரசு அறிவிக்கிறதோ, அதுவரை போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்தப் போராட்டத்தில் கே. ஆறுமுகநயினார், ஏ.துரை, வி.தயானந்தம் (சிஐடியு), ஆறுமுகம் (ஏஐடியுசி), சுப்பிரமணியபிள்ளை (எச்எம்எஸ்), நாராயணசாமி (ஐஎன்டியுசி), வெங்கடேஷ் (எம்எல்எப்), அர்ஜூனன் (ஏஏஎல்எல்எப்), நாகராஜ் (டிடிஎஸ்எப்), ராஜி (டிடபிள்யுயு) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;