tamilnadu

img

தமிழக சட்டப்பேரவை 11ஆம் தேதி கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 11 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறும் என பேரவைச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பதினாறவது சட்டமன்ற பேரவையில் முதல் கூட்டத்தொடர் 2021 ஆம் ஆண்டு மே திங்கள் 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் வைத்து நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்வர். நிகழ்ச்சிக்கு வரும் உறுப்பினர்கள் தேர்தல் வெற்றி சான்றிதழை எடுத்து வரவேண்டும். தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பேரவைத்தலைவர் மற்றும் பேரவைத் துணைத் தலைவருக்கான தேர்தல்கள் மே 12 ஆம் தேதி நடைபெறும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

;