tamilnadu

img

தென் கடலோரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, ஏப். 24-தமிழகத்தின் தென் கடலோரப் பகுதிகளில் வரும் 28ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும், இது அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று புயல் சின்னமாக மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.28ஆம் தேதி முதல் தென் கடலோர தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு எனவும், 29ஆம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழைக்கு வாய்ப் புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனத்தால் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில், புதுக் கோட்டை மாவட்டம் கீரனூரில் 5 செ. மீ. மழையும்,கோவை மாவட் டம் வால்பாறையில் 4 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

;