சென்னை:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், ஏஐடியுசி தலைவருமான தோழர் குருதாஸ் தாஸ் குப்தா கொல்கத்தாவில் இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு இரங்கல் தெரிவித்திருக்கிறது.
மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனது வாழ்நாள் முழுவதும் அடித்தட்டு மக்களுக்கும், உழைப்பாளி மக்களுக்கும், நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தன்னலமற்ற தலைவர் நம்மை விட்டு மறைந்தார் என்கிற செய்தியை நம்நெஞ்சம் ஏற்க மறுக்கின்றது. குருதாஸ் தாஸ் குப்தாவிற்கு தமிழ்நாடு மாநிலக்குழு தனது வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.தோழர் குருதாஸ் தாஸ்குப்தாவின் மறைவுக்கு செங்கொடி தாழ்த்தி தமிழ்மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் வீரவணக்கம் செலுத்துகிறது என்று அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் நா.பெரியசாமி கூறியிருக்கிறார்.திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,“இந்திய கம்யூனிஸ் கட்சி மூத்த தலைவரை இழந்துவிட்டது. அவரதுமறைவுக்கு வருந்துவதோடு, அக்கட்சியின் தோழர்களுக்கு ஆழ்ந்தஇரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.