tamilnadu

img

தாம்பரம் தொகுதி செயல் வீரர்கள் கூட்டம்...

இந்தியா கூட்டணி சார்பில் திருபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் களப்பணியாற்றுவது தொடர்பாக தாம்பரம் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் வியாழனன்று (மார்ச் 28) கார்லி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. திமுக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ, திமுக தீர்மான குழுச் செயலாளர் மீ.அ.வைத்தியலிங்கம், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், தாம்பரம் தொகுதி செயலாளர் மருது கணேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெர்சென்னை மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன், தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா, காங்கிரஸ் செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.செந்தில்குமார், மதிமுக மாவட்டச் செயலாளர் மா.வை.மகேந்திரன் (மதிமுக) உள்ளிட்டு கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினர்.

;