tamilnadu

img

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

தமிழ்நாட்டில் வாக்காளர் எண்ணிக்கை 6.18 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் புதிதாக 13 லட்சம் பேர் இணைந்துள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வெளியிட்டார். அதன்படி, ஆண் வாக்காளர்கள் 3.03 கோடியாகவும், பெண் வாக்காளர்கள் 3.14 கோடியாகவும் அதிகரித்து இருக்கிறது. மாற்று பாலினத்தவர்கள் 8294 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். ஆண் வாக்காளர்கள் காட்டிலும் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.