tamilnadu

img

சுற்றுச்சூழல் விதிமீறல்கள் : தமிழகம் முதலிடம் 

சுற்றுச்சூழல் விதிமீறல் தொடர்பாகக் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய அளவில் பதிவு செய்யப்பட்ட 61767 வழக்குகளில் அதிகபட்சமாக , 42756 வழக்குகள் தமிழகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன . இது கடந்த 2019 ஆம் ஆண்டை காட்டிலும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகத் தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது .

இந்திய அளவில் நடைபெறும் குற்றங்கள் குறித்த  புள்ளி விவரத்தைத் தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் ஆண்டுதோறும் வெளியிடும் . இதன்படி , கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற குற்றச்செயல்கள் குறித்த புள்ளிவிவரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது .

கொரோனா தொற்று காரணமாகப் பிற குற்றச் செயல்கள் பெரிய அளவில் அதிகரிக்காத நிலையில் , சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகள் மீதான குற்றங்கள் அதிகரித்துள்ளது . சுற்றுச்சூழல் மாசு தொடர்பான சட்டங்களின்கீழ் 2020ஆம் ஆண்டு 61767 வழக்குகள் இந்திய அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது . இதில் , 42756 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு தமிழகம் முதலிடத்தில் உள்ளது . இதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் இரண்டாம் இடத்திலும் , உத்தரப் பிரதேசம் மூன்றாம் இடத்திலும் உள்ளது .

;