tamilnadu

img

ரூ.1.33 லட்சம் வரை சம்பளத்தில் தமிழக அரசு வேலை!

தமிழக அரசின் மருத்துவ கல்வித்துறை மற்றம் குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்;
பதவி
: Vocational Counsellor (Medical Department)
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.36,200 - 1,33,100
தகுதி: Medical and Psychiatric Social Work பாடத்தை முக்கிய பாடமாக் கொண்டு Social Work பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.36,200 - 1,33,100

பதவி: Community Officer
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.35,600 - 1,30,800
தகுதி: Social Work பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் சமூக சேவை சார்ந்த பணியில் குறைந்தது 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி பொது பிரிவினர்கள் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. 

தேர்வு செய்யப்படும் முறை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எழுத்துத் தேர்வில் பெற்று மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 12.11.2022 மற்றும் 13.11.2022

விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.08.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/VOC%20&%20CO%20Tamil.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

;