tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அமேதி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரக் கொலை

உத்தரப் பிரதேசத்தில் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தினரை மர்ம நபர்கள் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் ஓஹரவ பவானி பகுதியில் வசித்து வரும் பள்ளி  ஆசிரியர் சுனில் குமார்(35), அவரது மனைவி, 5 மற்றும் 2 வயதுடைய இரு மகள்களை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். வியாழனன்று மாலை  நடந்த இந்த கொடூர சம்பவத்தில் சந்தன் வர்மா என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, சுனில்  குமாரின் மனைவி ரேபரேலி காவல் நிலை யத்தில் கொடுத்த புகாரில், சந்தன் வர்மா மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள், சுனில் குமாரின் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் உ.பி. காவல்துறையினர் தெரி வித்துள்ளனர். இது தொடர்பாக விரைந்து விசார ணை நடத்துமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.,யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவ ருமான ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்துள்ளார். அமேதி காங்கிரஸ் எம்.பி.  கிஷோரி லால் ஷர்மா, இது ஒரு கொடூரமான கொலை. மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் தொடர் புகொண்டு அனைத்துக் கோணங்களிலும் விசா ரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டு ள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்குமாறு ராகுல் காந்தி தன்னிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

ஜாபர் சேட் மீதான அனைத்து வழக்கு  விசாரணைக்கும் உச்சநீதிமன்றம் தடை

ஜாபர் சேட் மீதான அனைத்து வழக்கு விசாரணைக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. ஏற்கனவே ரத்துசெய்த வழக்கின் முகாந்திரம் குறித்து மீண்டும் விசா ரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரி வித்துள்ளது.

ஜாபர் சேட் வழக்கை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சுப்ரமணியன் விசாரிக்க தடை விதிக் கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை வழக்கை  ரத்துசெய்துவிட்டு மீண்டும் விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் ஜாபர் சேட் வழக்கு தொடர்ந்தார். ஜாபர் சேட் மீதான வழக்கை ரத்துசெய்வதாக அறிவித்துவிட்டு மீண்டும் விசாரிப்பதாக கூறு வது தவறு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள் ளது. ஏற்கனவே ரத்துசெய்த வழக்கின் முகாந்திரம் குறித்து மீண்டும் விசாரிக்க முடி யாது என ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாபர் சேட் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பீகாரில் ஆர்ஜேடி தலைவரை சுட்டுக் கொல்ல முயற்சி 

முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பவர் பங்கஜ் யாதவ். இவர் முங்கர் மாவட்டம் சபியா பாத் பகுதியில் தன் வீட்டருகே வியாழ னன்று காலை நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர  வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் பங்கஜ் யாதவ் மீது துப்பாக்கியால் சுட்டனர். மார்பில் குண்டு பாய்ந்த பங்கஜ் யாதவ், உடனே அருகிலுள்ள தனி யார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.