tamilnadu

img

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில அரசின் அதிகாரத்தை பறிக்க மோடி அரசு முயற்சி....

சென்னை;
2021 மாணவர் சேர்க்கை தொடர் பாக தேசிய மருத்துவ ஆணையம் வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அகில இந்திய தொகுப்பு இடங்களுடன் மாநில அரசின் இடங்களுக்கும் ஒன்றிய அரசே மாணவர் சேர்க்கைநடத்தும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசின் மருத்துவத்துறை தலைமை இயக்குநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் வரைவு அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.

திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும்உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடுஇடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென வழக்குகள் தொடுத்து தொடர் சட்டப்போராட்டத்தை நடத்தின.இதன்பின் னரே அகில இந்திய மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு(ஓபிசி) 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்துள்ள மோடி அரசு, மாநில அரசின் அதிகாரத்தை பறிக்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அரசியல்கட்சியினர் குற்றம்சாட்டி, கண்டித் துள்ளனர்.

;