tamilnadu

ஸ்டான் சுவாமி படுகொலையை கண்டித்து மலைவாழ் மக்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்... நாளை நடைபெறுகிறது....

சென்னை:
பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியும், மனித உரிமைகள் செயற் பாட்டாளரும், ஸ்டான் சுவாமிக்கு ஒன்றிய அரசும் மகாராஷ்டிரா மாநிலஅரசும் திட்டமிட்டு உரிய சிகிச்சை அளிக் காமல் படுகொலை செய் ததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் மலைவாழ் மக்கள் சங்கமும் பங்கேற்க உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் மாநில பொதுச்செயலாளர் திரு.இரா.சரவணன் விடுத்துள்ள அறிக்கை:

பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியும், மனித உரிமைகள் செயற் பாட்டாளரும், ஸ்டான் சுவாமிமறைவிற்கு தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.ஸ்டான் சுவாமி அவர்கள் திருச்சியை பூர்வீகமாக கொண்டவர். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பழங் குடியின மக்களின் உரிமைகளுக்காக பட்டித்தொட்டி எங்கும் குரல்கொடுத்து வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் 9ந் தேதி பீமா கோரேகான் சம்பவத்தையொட்டி தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே பார்க்கின்சன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த மாற்றுத் திறனாளியான அவருக்கு சிறையில் சரியான சிகிச்சை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.குறிப்பாக, நெரிசலும், கோவிட் தொற்றும் மிகுந்த தலேஜா சிறையிலிருந்து 84 வயதான ஸ்டான் சுவாமி அவர்களை அங்கிருந்து மாற்ற வேண்டுமென்ற பலதரப்பினரின் கோரிக்கைகளையும் அரசு செவிமடுக்கவில்லை. மும்பை உயர்நீதிமன்ற தலையீட்டின் அடிப் படையிலேயே தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். ஆனாலும், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு அவரது உடல்நிலை மோசமடைந்து கொண்டே வந்து உயிரிழந்துள்ளார்.இந்த அநீதியை எதிர்த்து 8.7.2021 அன்று மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பழங்குடியின மக் கள் பெருந்திரளாக கலந்து கொள்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;