tamilnadu

img

நகைக் கடன்களை ஆய்வு செய்யத் தனிக்குழு - தமிழ்நாடு அரசு உத்தரவு 

சென்னை : கூட்டுறவு வங்கிகளால் வழங்கப்பட்ட அனைத்து பொது நகைக்கடன்களையும் தனிக்குழு மூலம் ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது .

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் , அதில் ஏராளமான முறைகேடுகள் இருப்பது ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் , 5 சவரனுக்கு உட்பட்டது  மட்டுமில்லாமல் கூட்டுறவு வங்கிகளால் வழங்கப்பட்ட அனைத்து பொது நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே , கூட்டுறவு சார்பதிவாளர், கூட்டுறவு வங்கியின் சரக மேற்பார்வையாளர், நகை மதிப்பீட்டாளர் கொண்ட குழுவை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த குழு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் பெறப்பட்ட 100 சதவீதம் நகைக்கடன்களை ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதே போல் , சென்னை மண்டலத்தில் துணைப்பதிவாளர்களை கொண்ட குழு அமைத்து நகைக்கடன்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி , அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து நவம்பர் 21 -ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

;