tamilnadu

img

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் மாரிதாஸை குண்டர் சட்டத்தில் கைது செய்க.....

சென்னை:
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சிக்கும் பத்திரிகையாளர் கள் மீது அவதூறு பரப்பிவரும் மாரிதாஸை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்சங்கம்  (டி.யூ.ஜே)  வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் (டி.யூ.ஜே)மாநில தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமூக செயற்பாட்டாளர் என்ற போர்வையில் செயல்பட்டுவரும் மாரிதாஸ், மே 6 அன்று  காலை டிவிட்டரில் பத்திரிகையாளர்களை மிக கேவலமாக இழிவு படுத்தும் வகையில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். இந்த செய்தி தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் மத்தியில்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாரிதாஸ் பல்வேறு ஊடகங்கள் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும் அவதூறு பரப்பி, அவர்கள் குறிப்பிட்ட கட்சிகளுக்கு ஆதரவாளர்கள் என்றும்,  தி.மு.க., தி.க., மற்றும் இடது சாரி கட்சிகளுக்கு ஆதரவாக எல்லா ஊடகங்களும் பணிபுரிவதாக கூறி, பல்வேறுபொய் செய்திகளை யூ டியூப் போன்ற சமூக வளைதளங்களில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார்.

மாரிதாஸின் மிக மோசமான, கீழ்த்தரமான அவதூறு வீடியோக்கள் குறித்து ஊடகவியலாளர் குணசேகரன் நீதிமன்றத்தில் மாரிதாஸ் மீது வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் உயர்நீதிமன்றம் மாரிதாசுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் குணசேகரனுக்கு நஷ்டஈடு வழங்க ஆணை பிறப்பித்தது.இதை அடுத்து, சிறிது நாள் அமைதியாக இருந்த மாரிதாஸ் தமிழகத்தில் அவர் விரும்பியபடி ஆட்சி  ஏற்படாமல், அரசியல் மாற்றம் ஏற்பட்டதைபொறுக்க முடியாமல், மனநிலை பாதித்தவர்போல் பத்திரிகையாளர் களை மிக கேவலப்படுத்தியும், தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் குறித்தும், மேலும் பத்திரிகையாளர்கள் அவருக்கு மோசமான வேலை செய்து வருவதாக கேவலமாக செய்தியை வெளியிடுகிறார்.  இந்த செயலை டி.யூ.ஜே. வன்மையாக கண்டிக்கிறது.

டி.யூ.ஜே.சார்பில் போலீசிடம் புகார்
இதனால் தமிழகம் முழுவதும் உள்ளபத்திரிகையாளர்கள்,  ஜனநாயக சக்திகள் கடும் கோபத்தில் உள்ளனர். டி.யூ.ஜே.வின் மாநில இணைச்செய லாளர் கே.மணிவாசகம் தலைமை யில் திருவொற்றியூர் பகுதி பத்திரிகையாளர்கள் மாரிதாஸ் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுபோல் மாநிலம் முழுவதிலும் பத்திரிகையாளர் அமைப்புகள், பத்திரிகை யாளர்கள், ஊடகவியலாளர்கள் கொந்தளித்து புகார் அளித்து வருகிறார்கள்.கொரோனா இரண்டாம் அலை பரவிஆங்காங்கே மக்கள் கொத்துக்கொத் தாக மடியும் வேலையில், அதற்காக சமூகத்தின் அனைத்துத்தரப்பினரும் கவலைப்படும் நிலையில், பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக  மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளஅறிவிப்பை பொறுத்துக்கொள்ள முடியாமல், அதை  கொச்சைப்படுத்தும் வகையில்  இதுபோன்ற அவதூறு செய்திகளை பரப்புவதால், தமிழகத்தில் சட்டம்ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். 

எனவே, தமிழக அரசு உடனடியாக மாரிதாஸை கைது செய்து, குண்டர் சட்டத்தில் காவலில் வைக்க வேண்டும்என்று தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட் சங்கம் (டி.யூ.ஜே.) தமிழக அரசைவலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;