tamilnadu

img

டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதி நியமனம்

டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகாரை விசாரணை செய்யும் அதிகாரியாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்புக்காகக் கடந்த 21-ஆம் தேதி திருச்சி, புதுக்கோட்டை சென்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. 
இதுகுறித்து பாதிப்புக்குள்ளான பெண் எஸ்பி, தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி, தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் ஆகியோரிடம் கடந்த 23-ஆம் தேதி புகாா் அளித்தாா். புகாரின் அடிப்படையில் விசாரணை செய்ய விசாகா கமிட்டி அமைத்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் 24-ஆம் தேதி உத்தரவிட்டாா். இக்குழு, தமிழக அரசின் திட்டம் மற்றும் வளா்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவின் பெயரில் சிபிசிஐடி அதிகாரிகள், வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்க இருந்த நிலையில், புகாரை விசாரணை செய்யும் அதிகாரியாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டுள்ளார். 

;